1. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் முறை — என்று அழைக்கப்படுகிறது —?
A. பதவி நீக்கம்
B. பழிச்சாட்டுதல்
C. பதவி பறிப்பு
D. பதவி விலகல்
B. பழிச்சாட்டுதல்
2. மக்களவை மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் —– பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் —?
A. 1/3
B. 2/3
C. 1/10
D. 2/10
C. 1/10
3. ஒரு திருத்தச் சட்டம் முன்மொழிவதற்கு யாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் —?
A. குடியரசுத் தலைவர்
B. சபாநாயகர்
C. பிரதமர்
D. எதிர்க்கட்சித் தலைவர்
B. சபாநாயகர்
4. நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடருக்கு தலைமை தாங்குபவர் —?
A. குடியரசுத் தலைவர்
B. சபாநாயகர்
C. பிரதமர்
D. எதிர்க்கட்சித் தலைவர்
B. சபாநாயகர்
5. எந்த திருத்தச் சட்டத்தின்படி ஒரு உறுப்பினரை கட்சித் தாவலின் அடிப்படையில் தகுதி இழப்பு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது —?
A. 52வது திருத்த சட்டம்
B. 86 வது திருத்த சட்டம்
C. 69 வது திருத்த
D. 73 வது திருத்த சட்டம்
A. 52வது திருத்த சட்டம்
6. மாநிலங்களவை உருவாக்கப்பட்ட ஆண்டு —?
A. 1952 ஏப்ரல் 5
B. 1952 ஏப்ரல் 4
C. 1952 ஏப்ரல் 3
D. 1952 ஏப்ரல் 2
C. 1952 ஏப்ரல் 3
7. மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத் தலைவராக இருப்பவர் —?
A. குடியரசுத் தலைவர்
B. சபாநாயகர்
C. பிரதமர்
D. துணை குடியரசுத் தலைவர்
D. துணை குடியரசுத் தலைவர்
8. மக்களவைக்கு இணையான அதிகாரம் மாநிலங்களவை எதில் பெற்றுள்ளது —?
A. சட்டம் இயற்றுதல்
B. பதவி நீக்கம்
C. சட்டத் திருத்தம்
D. அவசரநிலை பிரகடனம்
A. சட்டம் இயற்றுதல்
9. பணம் சார்ந்த நடவடிக்கைகளில் மாநிலங்களவை எத்தனை நாட்களுக்கு மட்டுமே காலதாமதப்படுத்த முடியும் —?
A.10
B. 7
C. 14
D. 20
C. 14
10. நிதி முன்வரைவு சட்ட உறுப்பு —?
A.110
B. 249
C. 312
D. 120
A.110
11. ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் —?
A. குடியரசுத் தலைவர்
B. உச்சநீதிமன்ற நீதிபதி
C. பிரதமர்
D. சபாநாயகர்
D. சபாநாயகர்
12. ஈரவையின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் —?
A. குடியரசுத் தலைவர்
B. சபாநாயகர்
C. உச்சநீதிமன்ற நீதிபதி
D. பிரதமர்
B. சபாநாயகர்
13. சரத்து —- இன் படி அனைத்து இந்திய தேர்வாணையத்தை உருவாக்க மாநிலங்களவைக்கு அதிகாரம் உள்ளது —?
A. 110
B. 249
C. 312
D. 120
C. 312
14. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக செயல்படுவது —?
A. மாநிலங்களவை
B. மக்களவை
C. மக்களவை / மாநிலங்களவை
A. மாநிலங்களவை
15. தனிநபர் முன்வரைவை அறிமுகப்படுத்த எத்தனை மாதத்திற்கு முன் மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ தெரிவிக்க வேண்டும் —?
A. 2 மாதம்
B. 1 மாதம்
C. 6 மாதம்
D. 3 மாதம்
B. 1 மாதம்
16. பட்டியலில் குறிப்பிடாத எஞ்சியுள்ள அதிகாரங்களை பெற்றிருப்பது —?
A. மத்திய அரசு
B. மாநில அரசு
C. மத்திய / மாநில அரசுகள்
D. குடியரசுத் தலைவர்
A. மத்திய அரசு
17. அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை பற்றி குறிப்பிடும் சரத்து —?
A. 356
B. 360
C. 368
D. 370
C. 368
18. புதிய மாநிலங்களை உருவாக்குவது, எல்லைகளை மாற்றி அமைப்பது —?
A. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
B. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை
C. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50 சதவீதத்திற்கு மேல் மாநில சட்ட மன்றங்களின் ஆதரவு
D. அனைத்தும் சரியானவை
A. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
19. அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கொள்கைகள் திருத்தம் செய்ய —?
A. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
B. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை
C. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50 சதவீதத்திற்கு மேல் மாநில சட்டமன்றங்களில் ஆதரவு
D. அனைத்தும் சரியானவை
B. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை
20. நாடாளுமன்றத்தில் உள்ள நிலை குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப —– வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன —?
A. 5
B. 6
C. 4
D. 10
B. 6
21. மக்களவைக்கு குடியரசுத் தலைவர் எத்தனை ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார் –?
A. 12
B. 2
C. 10
D. 3
B. 2
22. இந்தியாவில் ” நாடாளுமன்ற முறை ” எந்த நாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது –?
A. இங்கிலாந்து
B. அமெரிக்கா
C. கனடா
D. சோவியத் ரஷ்யா
A. இங்கிலாந்து
23. எத்தனை சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகும் –?
A. 5
B. 7
C. 4
D. 6
D. 6
24. மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை 1/3 பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர் –?
A. 2 ஆண்டு
B. 3 ஆண்டு
C. 5 ஆண்டு
D. 6 ஆண்டு
A. 2 ஆண்டு
25. சரத்து —- இதன்படி மாநிலங்களவை மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் சட்டம் இயற்ற முடியும் –?
A. 110
B. 249
C. 312
D. 120
B. 249
26. மத்திய பட்டியலில் உள்ள துறைகளில் தவறானது எது — ?
A. பாதுகாப்பு
B. காவல் துறை
C. நாணயம்
D. வெளிநாட்டு வர்த்தகம்
B. காவல் துறை
27. பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறை எது –?
A. உள்ளாட்சி அரசாங்கம்
B. தகவல் தொடர்பு
C. கல்வி
D. பொது சுகாதாரம்
C. கல்வி
28. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் தவறானது எது –?
A. காவல்துறை
B. உள்ளாட்சி அரசாங்கம்
C. விவசாயம்
D. திருமணம், வாரிசுரிமை
D. திருமணம், வாரிசுரிமை
29. மாநிலத்தின் செயல் அதிகாரம் பெற்றவர் –?
A. முதலமைச்சர்
B. முதன்மை செயலாளர்
C. ஆளுநர்
D. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
C. ஆளுநர்
30. எந்த அட்டவணையில் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்ட ரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன –?
A. 7 வது அட்டவணை
B. 8 வது அட்டவணை
C. 10 வது அட்டவணை
D. 12 வது அட்டவணை
A. 7 வது அட்டவணை
Very useful
Thank u sir it’s very useful